காடன் -
ஒரு பக்கம் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் பணவெறி பிடித்த, அதிகார பலம் படைத்த விலங்குகள் காட்டுக்குள் பிரமாண்டமாய் அமைக்க நினைக்கும் township பிராஐக்ட்.
மறுபக்கம் காட்டு யானைகளோடு அவர்களின் ஒரு உறவாக வாழும் காடே தன் உயிரென்று வாழும் காவல்தெய்வம் காடன்.
இந்தப் போராட்டத்தில் காடன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை!
காட்டு யானைகளோடு அவைகளின் மொழியில் உரையாடும் போதும் சரி, டெல்லியில் காடு தனக்குத்தான் சொந்தம் என்ற சொத்துபத்திரத்தை பறித்து செல்லும் ரவுடிகளை ஒரு காட்டுமனிதனுக்கே உரிய டைலில் துவசம் செய்யும் நடையிலும் சரி, யானையை கொன்ற வன அதிகாரியை துரத்தி துரத்தி மரத்திற்கு மரம் தாவி உச்சிக்கே சென்று அவனை உச்சிக்கொம்பில் தூக்கி எறிந்து பழி தீர்ப்பதிலும் சரி man of the forest கௌரவம் பெற்றதை விட ஒருபடி மேலே போய் "இந்தக் காட்டை பாதுகாக்க நான் ஒருவன் போதும்டா! " என்று சிங்கம் போல் கர்ஐப்பதாகவே தோன்றுகிறது!
பார்வையிலும் பேச்சிலும் நடையிலும் ஓட்டத்திலும் மரம் விட்டு மரம் தாவுவதிலும் அதிலும் குறிப்பாக இரண்டு மலைகளுக்கிடையே இருக்கும் ஒற்றை பால மரத்தை வேகமாக ஓடிக் கடக்கும் காட்சியிலும் மிக இயல்பாக நடிப்பில் வெளுத்துவாங்கியிருக்கிறார் ராணா.
ரிப்போர்டர் தோழி தனது வேலையையும் ராணாவுக்காக இழந்து இறுதியில் யூடியூப் லைவ் காஸ்ட் மூலம் பிரதமரையே பிரதமரையே township வாலை இடிக்கப் உத்தரவு போடச் செய்வது மீடியாவின் சாதனை. ஆனால் அதை ஆரம்பித்திலேயே செய்ய முடியாததற்கு மீடியாவும் அமைச்சரின் கைக்குள் என்று காட்டப்பட்டிருப்பது ஒரு ஆறுதலான யதார்த்தம்.
சாமியார் அமைச்சருடன் நடனமாடுவது அந்த ஆடும் ஸ்டைல், யானைகள் செல்லும் பாதைகளுக்கு குறுக்கே சுவர் எழுப்பியது, காட்டுக்குள் நடைபெறும் இந்த திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமைரையே அழைப்பது இதெல்லாம் கோயமுத்தூரின் வரலாற்றில் சமீபத்தில் நடந்த சம்பவங்களையே தத்ரூபமாக காட்டியிருப்பது டைரக்டரின் துணிச்சல்!
மசாலா படங்களுக்கு மத்தியில் சமூக அக்கறையுள்ள ஒரு படத்தை காடனின் இயல்பான நடிப்புடன் காட்டின் உயிர்த்துடிப்புடன் காட்சிகளை படமாக்கியதற்கு ஒரு சல்யூட்.
பணமும் இருக்கிறது. பதவியும் இருக்கிறது. காவல்துறையும் தன்பக்கம். சட்டமும் தன் கையில். காதலின் மயக்கத்தில ;இருக்கும் வி~;ணு விசாலும் கும்கி யானையும் துணைக்கு. ஆனால் அந்தப்பக்கம் காடனுக்கு உதவ யார் இருக்கிறார்கள்? மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் காட்சி. தன்னை குற்றவாளி என்று தவறாக யானைகள் துறத்தினாலும் ஏன் இப்படி பட்டினி கிடந்து சாகிறீர்கள் என்று அவர்களுக்கு உணவு கொண்டுவருவதும் அவைகள் துரத்துவதும் என, அவனது துணிச்சலும் காட்டு யானைகளின் மீது காட்டின் மீது அவன் கொண்ட காதலுமே அவரது வெற்றிக்கு மூலம் என காட்டியிருப்பது பெருமிதம்! புதிய களங்களிலும் நடக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் ஒரு சபா~;!
வி~;ணு விசால் ஹீரோவா? அல்லது ஹீரோவுக்கு எதிராக செயல்படும் வில்லனா? தன் காதலி பெண் போராளி தாக்க வரும்போது ஒரு திறமையானவராக தெரிகிறார். தனது கும்கி யானை ஐல் மீது வைத்திருக்கும் பாசம் ஹீரோ காடனுக்கு சமமாக அவரை நிறுத்துகிறது. தனது காதலிக்காக தன்னை மறந்து தான் ஒரு காட்டை அழிக்கும் அதிகாரம் படைத்த கும்பலுக்குக்குதான் செயல்படுகிறோம் என்பதையும் மறந்து கனவு உலகத்தில் காதல் போதையில் மயக்கத்தில் இருக்கும் ஒரு ரொமாண்டிக் ஹீரோ! மயக்கம் தெளிந்தும் கும்கியின் சாவிற்கு அந்த கும்பலே காரணமாகும் போதும் அவர் வெகுண்டு எழாமல் ராணவுடன் கைகோர்க்காமல் கதையில் இருந்து முற்றிலும் காணாமல் போயிருப்பது அவரது கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்?
1. துப்பாக்கி ஏந்திய போராளிகள் வீணாக செத்து மடிந்தது ஏன்? அதிலும் குறிப்பாக வி~ணு விசாலின் காதலி. அவர்கள் சாதித்தது என்ன?
2. வி~;ணு விசால் பாதிக்கு மேல் காணாமல் போனவர் பட்டியலில் சேர்க்கப்பட்டது ஏன்?
3. காட்டில் township கட்டுவதற்கு ஸ்டே வாங்கிய பின்னும் படத்தில் காட்டுவதுபோல அதைகிழித்து எறிந்துவிட்டு தொடர்ந்து அங்கே கட்டுமான பணிகள் நடந்து அதற்கு பிரதமரையே வனத்துறை minister அழைக்கிறார் என்பது யதார்தமான ஒன்று தானா?
4. காட்டில் யானைகளையும் முதல்காட்சியில் வரும் ஒரே ஒரு புலியையும் தவிர வேறு விலங்குகள் ஏதும் கிடையாதா?
5. காடன் எப்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்? திரும்பி வந்தபிறகும் ஏதோ மாமியார் வீட்டுக்கு போய்விட்டு வந்தது போல் அவரிடம் எந்த மாற்றமும் இல்லையே. அது ஏன்?
6. காட்டில் வாழும் மக்கள் முதலில் போராடுகிறார்கள். பின் பயந்து ஓடுகிறார்கள். மீண்டும் காடனுடன் கிளைமாக்சில் போராடுவதற்கு வலுவான காரணம் எதுவும் சொல்லப்படாதது ஏன்?
7. கதையின் ஆழத்தையும் போராடுபவர்களின் உணர்ச்சி கொந்தளிப்பையும் காட்டை பாதுகாக்க முயலும் ராணவின் க~;டத்தையும் அடிமனதில் உரைக்கும்படி செய்ய இசையும் பாடலும் வசனங்களும் கைகொடுக்காதது ஏன்?
Still- காடன் - காடுகளை பாதுகாக்கும் அதற்கு போராடும் ஒரு ஆண்சிங்கத்தின் கதை!
நமது score 85/100.

No comments:
Post a Comment